அனைத்து நிமிடங்களுக்கும் அறுபது வினாடிகள் என யார் சொன்னது?
கடிகார சட்டத்திலும் சில ஓட்டைகள் உண்டு
கவிதை வரிகளுக்காக காத்திருக்கும் நிமிடங்கள் நீண்ட நிமிடங்கள்
கூரை பிய்த்து கொட்டும் கவிதைக்காக காகிதம் தேடும் நிமிடம்
சிறிய நிமிடம்
இருண்ட வானம் மழை பிரசவிக்க தவிக்கும் நிமிடங்கள்
வாக்கியம் முடிக்கும் முன் வானம் பிரித்து கொட்டும் மழை
சிறிய நிமிடம்
ஞாயிற்று கிழமையின் கொண்டாட்ட மாலையில் சிறிய நிமிடங்கள்
திங்கள் காலையில் எப்போதுமே நீண்ட நிமிடங்கள்
தேர்வுக்கு முந்தைய நிமிடம் நீண்ட நிமிடம்
தேர்வின் கடைசி நிமிடம் சிறிய நிமிடம்
வெற்றிக் காலங்கள் சிறிய நிமிடங்கள்
தோல்வி நிமிடங்கள் நீண்ட நிமிடங்கள்
குழந்தை பருவத்தில் எல்லாமே சிறிய நிமிடங்கள்
அந்திம காலத்தில் நீண்ட நிமிடங்கள்

ஆனால் சகியே -
'உன்னை பிரிந்திருக்கும் நிமிடம் நீண்ட நிமிடம்; சேர்ந்திருப்பது சிறிய நிமிடம்'
என்ற சிந்தனையை இங்கே சொல்வேன் என எப்படி எதிர்பார்க்கிறாய்,

நீண்ட நிமிடங்கள்

தான் பேசும்போது சிறிய நிமிடம்
பிறர் பேசும்போது பெரிய நிமிடம்அனைத்து நிமிடங்களுக்கும் அறுபது வினாடிகள் என யார் சொன்னது?
ஆனால் சகியே -
'உன்னை பிரிந்திருக்கும் நிமிடம் நீண்ட நிமிடம்; சேர்ந்திருப்பது சிறிய நிமிடம்'
என்ற சிந்தனையை இங்கே சொல்வேன் என எப்படி எதிர்பார்க்கிறாய்,
எனக்கு பழைய சோறு பிடிக்காது என தெரிந்திருந்தும்?
No comments:
Post a Comment